மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும், ரகசிய கண்காணிப்பு
கேமராக்களை பொருத்த, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களால்,
மாணவிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்து,
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை தடுக்க, மும்பை போலீசார், அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளனர். இதுகுறித்து, மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
மும்பையில் உள்ள, அனைத்து பள்ளி பேருந்துகளிலும், ரகசிய கண்காணிப்பு கேமரா
பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தது, 15 நாட்களுக்கான பதிவுகளை, கேமராக்களில் சேமித்து
வைத்திருக்க வேண்டும். தனியார் பேருந்துகளை, பள்ளிக்காக வாடகைக்கு
அமர்த்தினாலும், அந்த பேருந்துகளிலும் கேமரா வசதி, கட்டாயம் இருக்க
வேண்டும்.
பேருந்துகளின் பதிவெண், கண்டக்டர், டிரைவரின் பெயர்கள் உள்ளிட்ட
விஷயங்கள், சம்பந்தபட்ட பகுதிகளின், போலீஸ் ஸ்டேஷன்களில், முறையாக
தெரிவிக்கப்பட வேண்டும்.
பள்ளி பேருந்துகளில், போலீசார் திடீர் சோதனை நடத்தி, டிரைவர் மற்றும்
கண்டர்கள், மது குடித்தனரா என்பதை சோதனை செய்வர். இவ்வாறு மும்பை போலீஸ்
வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...