மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது
பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டது.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான், முதன்மை தேர்வுக்கு தகுதி
பெற முடியும். முதன்மை தேர்வில், பொதுப் பாடத்திற்கு கூடுதலாக
முக்கியத்துவம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது பாடம் பிரிவில், நான்கு
தாள்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாளுக்கும், தலா, 250 மதிப்பெண்கள் உண்டு. இது தவிர, இரண்டு
விருப்ப பாடங்களுக்கு தேர்வு இருக்கும். இதற்கு, தலா, 250 வீதம் மதிப்பெண்
வழங்கப்படும். கட்டுரை மற்றும் ஆங்கிலம் தாளிற்கு ஏற்கனவே உள்ளபடி, 300
மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பிரதான தேர்விற்கான மொத்த மதிப்பெண், 1,800 ஆகும். யு.பி.எஸ்.சி.,
அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில், சிவில் சர்வீஸ்
தேர்வில், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில், தேர்வு முறையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு உள்ள திறன், சமூக -பொருளாதார இலக்குகளை
அடையும் விஷயங்களில் புரிந்துணர்வு ஆகியவற்றை கண்டறியும் வகையில்,
இத்தேர்வு அமையும்.
இந்த மாற்றத்திற்கு, பிரதமர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததும் ,
இது நடைமுறைக்கு வருகிறது. சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு,மே 26ம்
தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...