"உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி,
மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி
துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தோலில், ஆங்காங்கே வெள்ளையாக தோன்றும்
புள்ளிகள், வெண்புள்ளிகள் எனப்படுகிறது. இக்குறைபாடுள்ள மாணவர்களை, பல்வேறு
காரணங்கள் கூறி, இடம் கொடுக்க, சில பள்ளி, பல்கலைக்கழக நிர்வாகங்கள்
மறுத்து வருகின்றன.
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் -இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு, இப்பிரச்னையை, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர், ஆரம்ப கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆகியோருக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், "வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, எந்தவொரு மாணவரையும், பள்ளி நிர்வாகங்கள் பாரபட்சமாக நடத்தக் கூடாது. இதை, அனைத்து பள்ளி கல்வி இயக்குனர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...