அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
சிறப்பாசிரியர்களுக்கு, ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பயிற்சி முகாமில்,
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய நிறுவனம் மற்றும் சித்தர் நிறுவனமும்
இணைந்து நடத்திய ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய பயிற்சி முகாமில், சான்றிதழ்
வழங்கும் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலையில் நடந்தது. இதில் நகராட்சி தலைவர்
செல்வராஜ் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட
ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நீரதா, ஆட்டிசம்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு குறித்து
பயிற்சிகளை அளித்தார்.
பயிற்சியில் திருப்பூர், கோவை, நாமக்கல்,
திண்டுக்கல், திருவாரூரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச்
சேர்ந்த, 55 சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.ஆர்.சி.,
மையத்தின் பயிற்சியாளர் ராஜேஷ், பேச்சுமொழி ஆய்வாளர் பிரியதர்சினி, சித்தர்
நிறுவனத்தின் செயல் இயக்குனர் சேதுலிங்கன், ஒருங்கிணைப்பாளர் கலா உட்பட
பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...