ஆசிரியர்கள் மற்றும் இளம் பெண்ணை, போலீசார்,
கொடூரமாக தாக்கியது குறித்து, பீகார், பஞ்சாப் மாநில அரசுகளிடம், சுப்ரீம்
கோர்ட் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில்,
நிரந்தர பணியை வலியுறுத்தி, அங்குள்ள ஒப்பந்த ஆசிரியர்கள், நேற்று
முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வன்முறை வெடித்ததை
அடுத்து, போலீசார், அவர்கள் மீது, தாக்குதல் நடத்தினர். இதில், பல
ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர்.பஞ்சாபில், தன்னை கிண்டல் செய்த, டாக்சி
டிரைவரை தட்டிக் கேட்ட, இளம் பெண்ணை, அம்மாநில போலீசார், சரமாரியாக
அடித்து, உதைத்தனர். இந்த சம்பவம், "டிவி'க்களில் வெளியாக, பதற்றத்தை
ஏற்படுத்தியது.
இந்த இரண்டு சம்பவங்களையும், சுப்ரீம் கோர்ட், நேற்று, தானாக
விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி, ரஞ்சனா
பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து விசாரித்தது.பின்,
"இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும், சம்பந்தபட்ட, பீகார் மற்றும்
பஞ்சாப் மாநில அரசுகள், வரும், 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு, அட்டர்னி ஜெனரல், வாகனவதி, மூத்த
வழக்கறிஞர், ஹரீஸ் சால்வே ஆகியோர், கோர்ட்டுக்கு உதவ வேண்டும்' என,
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...