1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி
பெற்றுவிட்ட போதிலும், விணவெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு
மிகவும் பொருத்தமான உணவினை தயார் செய்வதில் அவர்கள் சிக்கல்களையே
எதிர்கொண்டனர்.
எதிர்கொண்டனர்.
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்
செல்லும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் உணவில், உணவின் அளவை விட
அவ்வுணவின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய சக்தியே பிரதானமாகக் கருத்தில்
கொள்ளப்படும்.
அதற்கடுத்து பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்படும் விடையங்கள் நீண்ட
காலத்திற்கு சேமிக்கும் தன்மை மற்றும் இலகுவில் சேமிக்கும் தன்மை
ஆகியனவாகும். இதன் காரணமாக விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும்
பயிற்சிகளில் உணவுப் பழக்கப் பயிற்சியும் பிரதான இடத்தை வகிக்கின்றது.
விண்வெளிப்
பயணத்தின் ஆரம்ப காலங்களில் சாதாரணமாக பூமியில் பயன்படுத்தும் உணவுவகைகளை
விண்வெளியில் பயன்படுத்துவதில் பல்வேறு வகையான சிக்கல்களை விண்வெளி
வீரர்கள் எதிர்கொண்டனர்.
சாராதண உணவுவகைகளை விண்வெளியில் பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல்
பொதிசெய்வதே பெரும் பிரச்சினையாக காணப்பட்டது. புவியீர்ப்பு விசை இல்லாத
நிலையில் உணவுப்பொருட்கள் வெளியே சிந்திவிடாதபடி அவை பொதி செய்யப்பட
வேண்டும். தவறுதலாக வெளியே சிந்தும் நீர்ப்பதார்த்தங்கள் விண்ணோடத்தின்
பாகங்களுள் சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.
இவ்வாறான காரணங்களினால், தொடக்க காலத்தில் விண்வெளி வீரர்களுக்கான
உணவுகள் பசைத் (semi-liquid) தன்மையுடையதாக உருவாக்கப்பட்டு, கைகளினால்
பிதுக்கி வெளியே எடுக்கக்கூடியவாறு சிறுகுழாய்களில் (tube)
பொதிசெய்யப்பட்டே விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
எனவே, பூமியில் காணப்படும் அனைத்து வகையான உணவுப் பதார்த்தங்களையும்
இவ்வாறு பசைவடிவில் பொதிசெய்வது சாத்தியமற்று இருந்தது. இதன் காரணமாக
விண்வெளி வீரர்களுக்கான உணவு வகைகள் வரையறைக்குட்பட்டதாகவே காணப்பட்டன.
இருப்பினும் ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணத்திக் கால அளவு குறுகியதாக காணப்பட்டதால், உணவுப்பொருள் விண்வெளிப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படவில்லை.
இருப்பினும் ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணத்திக் கால அளவு குறுகியதாக காணப்பட்டதால், உணவுப்பொருள் விண்வெளிப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படவில்லை.
ஆனால், தொடர்ந்துவந்த காலங்களில் விண்வெளிப் பயணங்களின் காலஅளவு
அதிகரித்ததுடன் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நீண்டகாலம் தங்கியிருந்து
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், நீண்டகாலம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் விண்வெளி
வீரர்களுக்கு வெவ்வேறு வகையான சலிப்பை ஏற்படுத்தாத உணவுப்பதார்த்தங்களை
வழங்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது.
இதன் காரணமாக விண்வெளி உணவு தொடர்பான நிபுணர்களின் அயராத முயற்சி
விண்வெளியில் பல்வேறு வகைப்பட்ட உணவுகளை பயன்படுத்துவதைச்
சாத்தியமாக்கியது. அது மட்டுமன்றி, தொடர்ந்துவந்த காலங்களில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் விண்வெளிக்கு ஆய்வுப் பணிகளுக்காகச்
செல்லத் தொடங்கினர்.
எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவுகளை வழங்க வேண்டிய தேவையும்
எழுந்தது. இதுவும் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களையும் விண்வெளியில்
பயன்படுத்தத் தக்கவாறு உருவாக்குவதற்கான தேவையை உருவாக்கியது.
தற்போது,
விண்வெளி வீரர்களுக்காக பல்வேறு வகையிலான உணவுப்பொருட்களை விண்வெளி உணவு
தொடர்பான நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். விண்வெளி வீரர்கள் தமது
விருப்பிற்கேற்ப உணவுப்பொருட்களைத் தெரிவுசெய்யும் வசதி தற்போது
உருவாகியுள்ளது.
அது மட்டுமன்றி, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், குளிர்சாதன மற்றும்
உணவு மீள் சூடேற்றும் வசதிகளும் தற்போது காணப்படுகின்றன. விண்வெளி
வீரர்கள் பூமியில் காணப்படும் தமக்கு விருப்பமான உணவினை, விண்வெளி உணவு
தொடர்பான நிபுணர்களின் உதவியுடன் பொருத்தமான வகையில் உருமாற்றிப்
பொதிசெய்து, விண்வெளிக்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை தற்போது
உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...