மாநகராட்சி இளநிலை உதவியாளர்
பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட
உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட
ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்:-
சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40
இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை, சாந்தோம்
வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளது.இளங்கலை பட்டம் பயின்று,
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு
தகுதியானவர்கள். அதன் படி, 1-8-2012 தேதியில் 30 வயதுக்குள்பட்ட சென்னை
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. பதிவு
மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் உத்தேசப் பட்டியல்
சாந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில்
வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...