செஸ் போட்டியில், அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்.,
மேல்நிலைப்பள்ளி சார்பில் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடியில் கடந்த, 2ம் தேதி, மாநில அளவிலான செஸ் போட்டிகள்
நடைபெற்றது. இதில் 7, 9, 11, 13, மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான
சதுரங்க போட்டிகள், ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.
சென்னை, கன்னியாகுமரி,
கோவை, திருச்சி, அரியலூர், மதுரை, திருவாரூர், கடலூர் மற்றும் பெரம்பலூர்
உள்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட
செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இதில், 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில்,
அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, மூன்றாம்
வகுப்பு மாணவன் அஸ்லம் பிலேவியன் பங்கேற்று, அனைத்து சுற்றுகளிலும்
முதலிடம் பெற்றார். சாதனை மாணவர் அஸ்லம் பிலேவியனை, அரியலூர் மான்ஃபோர்ட்
மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஜான்சன் பாராட்டி, வெற்றி
கோப்பையை வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...