தியாகம் மற்றும் சேவை செய்யும் பணி ஆசிரியர்
பணி. ஆகவே, அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்புடன் செய்து சமுதாயத்துக்குத்
தேவையான நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என சுகாதாரத் துறை
அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் (விசை)
மற்றும் ராயல் அக்ரோ டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்ட
அளவில் 10 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதனை விருதுகளும், ஆசிரியர்களுக்கு
நல்லாசிரியர் விருதுகளும் வழங்கும் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
இதில், விருதுகளை வழங்கி அமைச்சர் கே.சி. வீரமணி மேலும் பேசியதாவது:
தமிழகத்தைக் கல்வித் துறையில் மிகச் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.
அதனால்தான் நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வி அனைவருக்கும் இன்றியைமையாதது. ஆகவே கல்வியை அனைவரும் கற்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார் வீரமணி.
விழாவுக்கு விசை இயக்கத்தின் நிறுவனர் அறிவொளி ஆனந்தன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்,
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிபுரிந்த தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதம் கிருஷ்ணன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜுடோ கே.கே. ரத்தினம், ஓய்வு பெற்ற சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டி.எஸ். செல்வராஜன், ஆயுர்வேத வைத்தியர் என். ரமேஷ் நாயுடு, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் சி. சித்ரா, மல்லகுண்டா கிராம கல்விக் குழுத் தலைவர் எம்.கே. ராஜா, குடியாத்தம் அரிசி வியாபாரி டி. ராஜேந்திரன், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் கே.பி. அர்ஜுனன், நகைத் தொழிலாளி சி.எஸ். தேவன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...