Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருகும் தாவரம் - தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.


"கருகும் தாவரம்"
- தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.

       முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் பணிநியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தாவரவியல் பட்டதாரிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இவர்களின் கண்ணீர் கதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

         கல்லூாரியில் சேரும் போதே பி.ஏ போன்ற மற்ற பட்டங்களை விட பி.எஸ்.சி போன்ற பட்டங்களில் சேர கடும் போட்டி அதிகம். மேலும் படிப்பு கட்டணமும் அதிகம். மூன்று வருடங்கள் முடிக்கும் போது அரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்று வருவதே மிகவும் கடினம். அதிலும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான் அரசு பி.எட். கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் தனியார் பி.எட் கல்லூரிகளில் சேர கட்டணமும் அதிகம், நன்கொடை வேறு.

         இவ்வாறெல்லாம் மிகவும் கடினப்பட்டு பயின்ற பிறகு இவர்களுக்கு கல்வி துறையில் எவ்வாறு பணி வாய்ப்பு கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

            அனைத்து பாடங்களுக்கும் முறையே 600 பணியிடங்கள் தோராயமாக ஒதுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இளங்கலை தமிழ் பட்டம் படித்தவர்கள் மட்டுமே 600 தமிழ் பட்டதாரி பணியிடங்களுக்கு போட்டியிடுவர். இதே போல் ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களையும் கூறலாம்.

             ஆனால் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 600 எனில் தோராயமாக அது கீழ்கண்டவாறு பிரிக்கப்படும். 

இயற்பியல் படித்தவர்களுக்கு 200 பணியிடம்.
வேதியியல் படித்தவர்களுக்கு 200 பணியிடம்.
உயிரியல் படித்தவர்களுக்கு 200 பணியிடம். 

      இதில் உயிரியல் பணியிடம் என்பது தாவரவியல் பட்டதாரிகளுக்கு 100 பணியிடம், விலங்கியல் பட்டதாரிகளுக்கு 100 பணியிடம் என பிரித்து வழங்கப்படுகிறது.

             மேலும் நடுநிலைப்பள்ளிகளில் பணியிடம் உருவாக்கப்படும் போதும் பாட சுழற்சி முறையின் அடிப்படையில் முதலில் கணிதம், பிறகு ஆங்கிலம், பிறகு அறிவியல் என்றவாறே உருவாக்கப்படுகிறது. இவ்வாறு பணியிடம் உருவாக்கப்படும் போதும் சரி பிறகு அந்த பணியிடம் பாடவாரியாக பிரிக்கப்படும் போதும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு போட்டி அதிகம்.

              இவ்வாறு கடின போட்டி நிலவுகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றும் தற்போது வரை பணிநியமனம் தள்ளி போவதால் தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் மிகவும் வருத்தமான மனநிலையில் உள்ளனர்.

            இவர்களின் பணிநியமனம் தள்ளி போவதினால் இவர்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.

              இவர்களுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களும் ஜனவரி மாதமே பணியில் சேர்ந்து விட்டனர்.

  • இவர்கள் ஜனவரி மாதம் முதலே பணிபுரிந்து வருவதால் பணியிலும் பதவி உயர்வு பெறுவதிலும் சீனியிராகி விட்டார்கள்.
  • மேலும் இவர்களுக்கு ஜனவரி மாதமே ஒவ்வொரு வருடமும் ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • தாவரவியல் பட்டதாரிகளுக்கோ மார்சு 31க்குள் பணியில் சேர்ந்தால் மட்டுமே 1ஃ1 ல் ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்கும். இல்லையேல் 1-4 எனப்படும் ஏப்ரல் மாதமே ஆண்டு ஊதிய உயர்வு மாதமாக நிர்ணயிக்கப்படும்.
  • பணி கிடைக்கும் வரை தனியார் பள்ளியிலாவது பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்று நினைத்தால், தனியார் பள்ளிகள் 1 வருட அக்ரிமண்ட் கேட்கிறார்கள்.
  • மற்ற பாடங்களில் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்கள் கூட கலந்தாய்வில் பங்கேற்று பணிநியமன ஆணை பெற்றுள்ள நிலையில் இவர்கள் மட்டும் என்று பணியில் சேருவோம் என தெரியாமல் ஏங்குகிறார்கள்.

உண்மை நிலவரம்.

         கல்வித் துறை ஏப்ரல் மாதங்களில் ஆசிரியர் பணிநியமனம் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு.

               காரணம் ஏப்ரல் மாதங்களில் தேர்வு சமயம் என்பதால் புதியதாக பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவையில்லை என்பதாலும், மே மாதங்களில் பள்ளி விடுமுறை என்பதாலும் ஜுன் மாதமே பணிநியமனம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நாம் கருதுகிறோம்.

                 இது ஒரு எதிர்பார்க்கப்படும் செயலே தவிர நிரந்தரம் இல்லை. அரசும், கல்வித்துறையும் நினைத்தால் நீதிமன்ற வழக்குளையும், இதர பிரச்சினைகளையும் சிறப்பு கவனம் எடுத்து உடனடியாக முடித்து, இப்போதே கூட பணி நியமனம் செய்யலாம்.

ஆனால் அதற்கு தேவை ஒன்று மட்டும் தான். உங்கள் ஒற்றுமை.


செய்ய வேண்டியது என்ன ?

            தேர்வு பெற்றவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து உங்கள் சார்பாக சட்டமன்ற கூட்டத்தின் போது அரசின் கவனத்தை ஈர்க்க செய்யலாம்.

           உள்ளுரில் உள்ள மீடியாக்கள் மூலமாக உங்கள் மனவேதனையை தொடர்ந்து எடுத்துரைக்கலாம்.

         பல்வேறு வழக்குகள் மற்றும் சிக்கல்கள் இருந்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயரை வெள்ளி மாலை 7.30 மணிக்கு வெளியிட்டு ஞாயிறு காலை கலந்தாய்வு நடத்தி, திறம்பட பணி நியமனம் வழங்கியவர்கள் நம் கல்வி துறையும், தமிழக அரசும்.

             இலங்கை தமிழர்கள் விஷயத்தில் தாய்மை உள்ளத்தோடு தெளிவாகவும், அதிரடியாகவும் முடிவுகளை எடுக்கும் நம் தமிழக முதல்வர் நிச்சயம் உங்கள் பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்.

                  அதற்கு தேவையெல்லாம் உங்கள் ஒற்றுமையும், சாத்வீகமான முறையில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதும் மட்டும் தான்.

ஒன்று படுங்கள். வெற்றி பெறுங்கள்!. 

விரைவில் பணிநியமன ஆணை பெற்று பணியில் சேர வாழ்த்துக்கள்.

-    அன்புடன் பாடசாலை.







42 Comments:

  1. Thanks.it is very useful as a medicine for our painful heart.once again wish u(padasalai) by all botany candidates.

    ReplyDelete
    Replies
    1. "கருகும் தாவரம்" ஒரு நாள் மீட்டெழுச்சி பெறும்!

      Delete
  2. sir, b.ed cs certificate totally waste certificate ai thirumba arasidam opadathu vidalam entha certificate vaithu oru puniyamum kedayathu namthu sangathin sarpaga anathu b.ed cs padithavarkali certificate anthayum thirumba arsidam opadathu vidalam enpathu enathu thalvana vendukol. etharga matum matuvathu anithu b.ed cs padithavarkal ondru kudukal .namthu asiriyar pani endrume oru kanuv than .nijam alla. epadkiku ungal - sangeetha.bca b.ed( cs) (not teacher)

    ReplyDelete
  3. not only botany candidates.missed cv-1 and cv-2 candidates also very sad! please release our results and save our life.

    ReplyDelete
  4. sir we are so grateful to you.because we thought nobody is there to handle our problem.but you proved that you are all with us.but sir we are taking so many steps for our result. but all in wain.the board is not opening their mouth.they are in the mentality to give punishment because of somebodies case.thank you very very much to you to give voice on behalf of us. you know or not till this month paadasalai is the one and only master key to release our feelings and pains.thank you sir.

    ReplyDelete
  5. i am raja from salem,,....its very sad story ...already 4 times TRB JD cheated...he gave only false news continuously...we are daily eagerly and hopefully waiting whether result are come today or tomorrow or day after tomorow...from december 2012 to up to today .but result not releasae..what we did sir ?.why this kind of big funishment...trb board members are playing our life....we are very much hurted.also wounded...their is no medisene to all of them.FNALLY TRB JD TOLD BOTANY FINAL SELECTION RESULT WILL BE RELEASE ON april 1 monday.....today is monday april1...whether they are release our result or cheat as APRIL fool..we are lot of thans to our padasalai author...he give good idea to all...so all are follow him idea..ok guys only few candidates are commenting aaded here .but other 420 candidates what are doing..please wakeup.it is good chances to get result .plaese all candidate add comments here.

    ReplyDelete
    Replies
    1. hai raja don't worry.let us wait what will happen.hopefully wait for positive .i am ur friend from krishnagiri.from yesterday night i felt very sad,our selected candidates must be cooperate with each other.otherwise this condition will be ...........

      Delete
  6. i have an idea..please all the 424 selected pg botany candidates .add here our name,REG NUMBER,DATE OF BIRTH,PG TRB MARK,WAITAGE MARK,COMMUNITY,UG AND PG STUDIED SUBJECT......OR SMS TO MY NUMBER...9965072235....IF YOU ASK ...WHY YOU ...WANT OUR DETAILS ....GUYS ....YOU KNOW YOUR STATES OF POSITION...and i sent to our result to all MLA and directors ,CEO,DEO AND CM CELL...PLASE ALL THE 424 CANDIDATES SENT YOUR INFORMATION.BY RAJA FROM SALEM

    ReplyDelete
  7. Please all of you to see above message.....its not a april fool ...if you resive it ;to give this infomation to all others

    ReplyDelete
  8. idhu than ella BT PG science padiththavargalin nilaimai pg tamil medium padippatharku vaaippu illatha karanaththal pg il .science students kku mattum tamil medium posting kidaiyadu pg tamil medium university il illadadhu yaar thavaru mudalvar ninaithal kalvithakuthiyai kuraithu GO podalaam nadakkuma/?????

    ReplyDelete
  9. Don't write 420 candidates. it is 3000 Candidates. This is for your information please.

    ReplyDelete
  10. ஒன்றரை வருடமாக அலைகழிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தியதின் செயல்பாடு மிகவும் வேதனைக்குரியது!

    ReplyDelete
  11. total number of published results of some subjects(ACCURATELY)

    PHYSICS(300)
    DSE-295
    OTHERS DPT-15

    CHEMISTRY(275)
    DSE-259
    OTHERS DPT-15

    ZOOLOGY(228)
    DSE-216
    OTHERS DPT-12


    DON'T WORRY ABOUT CV 1 CV 2
    SELECTED CANDIDATES

    ReplyDelete
  12. SORRY FOR CARELESS TYPING
    PHYSICS (310)

    ReplyDelete
  13. Give a chance for computer science candidates those who have finished. B.ed with c.s sir

    ReplyDelete
  14. pls consider cv 1 and 2 attented candidates but not selected in final list and save 3000 families life

    ReplyDelete
  15. maths subject ?

    ReplyDelete
  16. commerce major cv 1 and 2 attented candidate pls join here

    ReplyDelete
  17. pls give a chance for missed cv1&cv2 candidates.why are you called 6000 candidates for 3000 vacancies? we eagerly wait for good news from TRB.

    ReplyDelete
  18. what about tamil medium selected commerce, history and economics candiates? tamil medium verification ellam mudichacha? eppa engalluku vediviu kallam? any tamil medium candiates please reply any news about tamil medium?

    ReplyDelete
  19. yesterday govt polytechnic and engineering lecturer appointment order received by the candidate from cm... that vacancies also filled by trb exam held at 2012.. why they neglect pg botany and tamil medium vacancies when they released final list.. all are questioning to each other but there is no response from trb.. all is our bad fate..

    ReplyDelete
  20. Please release the result for missed cv-1 and cv-2 as soon as possible. we eagerly waiting for good news.

    ReplyDelete
    Replies
    1. eapadi sir namkuku 2nd release panuvangala

      Delete
  21. Respected TRB board members when will release PG BOTONY and TAMIL MEDIUM POST for COMMERCE, ECONOMICS AND HISTORY? Please tell me? English new year la than release pannala. Tamil new yearku ulla yavathu realese pannuveengala?

    ReplyDelete
  22. pls all Botany try to meet CM.

    ReplyDelete
  23. yes sir am ready to will come to chennai from namakkal district botany candidate

    ReplyDelete
  24. PLEASE ALL SELECTED AND MISSED CV-1 AND CV-2 CANDIDATES TRY TO MEET CM

    ReplyDelete
  25. Sir what about tamil medium selected commerce candidate . all tamil medium candidate join together get a job.pls contact:9943561735

    ReplyDelete
  26. all are tell for your views, but god only knows what happens the next. don't waste your valuable time. prepare the next trb pg exam or prepare TET.
    BEST OF LUCK.

    ReplyDelete
  27. DEAR BOTANY CANDIDATES I came to know that if cm urges the board they have to release the result even there is any case.any two people can only meet amma. so dear please anybody has influence with any ministers please take step for that.we people will gather where you are going to meet. behalf of our representation any two may meet AMMA to say about our situation.please anybody is there with influence to meet amma please message here.we all will follow you. otherwise we dont have key to open trb board's mouth.

    ReplyDelete
  28. pg botany and tamil medium posting pending la vachudu next pg and tet call for panniduvgala.. is it possible..

    ReplyDelete
    Replies
    1. Don't worry, it is not possible.

      Delete
  29. Respected and Dear PG Botony and TAMIL MEDIUM for COMMERCE, ECONOMICS AND HISTORY selected candiates please meet AMMA. Because GOD (amma) only knows what process going on the TRB BOARD. So please influenced candiates meet cm.

    ReplyDelete
  30. pg botany result published on trb notice board watch it yenaku conform ah theriuyathu i have seen in one website if they wrong pls forgive me.. i just inform others through this site thats all and i am nt botany candidate

    ReplyDelete
  31. It is true.but they selected only 198 candidates.

    ReplyDelete
  32. what about tamil medium vacancies......

    ReplyDelete
  33. dear sir/madam it is not198 candidates only.Hi!198 candidates. because they have released except tamil medium. so they may increase the posting.any way all the best to all of our friends.because we were waited for a long time to share this comment.won't they release in net?

    ReplyDelete
    Replies
    1. What r u talking sir.hi 198 candidates.other subjectla calfor panna postinga vida tamilmedium illama increase pannathu theriyatha ungalakku.namaku verum 198 mattum than potrukanga

      Delete
  34. Yes.but what about remaining non tamil medium candidates

    ReplyDelete
  35. sorry sir because of the releasing of our result I have totally confused now only i have calculated.even for zoology they are selecting 228 candidates but for us . why this kolavery for the board?

    ReplyDelete
  36. Dear botany candidates plse update communty wise cutoff plse.

    ReplyDelete
  37. what about botany counseling? when they are going to conduct?Anybody knows please update.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive