ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை
எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட்
கிளை தடை விதித்தது.
தேனியைச் சேர்ந்த ராதிகா என்பவர் தாக்கல்
செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி
ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010
ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள்,
ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.
ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...