"பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்கப்படும்.
என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும்"
என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்பப் பாடமாக சேர்க்கப்படுவதால்,
மாணவர்களுக்கு தேசபக்தி உணர்வு ஏற்படுவதுடன், அவர்களின் நடத்தையும்,
நல்லறிவும் வளர்கிறது.
ராணுவ கல்வித் திட்டம் என்பதால், அதைப் படிக்கும் மாணவர்களுக்கு, நல்ல
குணாதிசயங்கள் வளரும். ஏற்கனவே சில தன்னாட்சி கல்லூரிகளில், என்.சி.சி.,
விருப்பப் பாடமாக உள்ளது.
யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.சி., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களைப்
பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும், என்.சி.சி., பாடத்திட்டம், விருப்பப்
பாடமாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். இந்த கல்வியாண்டில், 30
தன்னாட்சி கல்லூரிகள், இதை பின்பற்ற உள்ளன.
என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சில முன்னுரிமைகள் உள்ளன.
தேசிய ராணுவ கல்வி நிறுவனம் (என்.டி.ஏ.,), "சி" சான்றிதழ் வைத்துள்ள,
என்.சி.சி., மாணவர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. சில
தொழிற்கல்வி நிறுவனங்களும், குறிப்பிட்ட பணியிடங்களை, என்.சி.சி.,
மாணவர்களுக்கு ஒதுக்குகின்றன.
இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...