எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை,
அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சில நேரங்களில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்
ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. உதாரணமாக, மதிப்பெண்ணை கூட்டுவதில்
தவறு, மதிப்பெண் அளிக்க மறந்து விடுவது, தவறுதலாக அதிக மதிப்பெண் போட்டு
விடுவது போன்ற தவறுகளை ஆசிரியர்களும் செய்வதுண்டு.
அத்தகைய தவறுகளுக்கு, ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யும்
வகையில், ஒவ்வொரு தப்புக்கும், ஒவ்வொரு விதமான தண்டனை, அபராதம்
அறிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சம், 15 மதிப்பெண் வரை வித்தியாசம்
இருந்தால், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு, எச்சரிக்கை மட்டும்
கொடுக்கப்படும்.
15 மதிப்பெண் முதல், 30 மதிப்பெண் வரை வித்தியாசம்
இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு, அதிகபட்சம், 1,000 ரூபாய் அபராதமும்,
கண்டன நோட்டீசும் அளிக்கப்படும்.
மொத்தம், 30 மதிப்பெண் முதல், 50 மதிப்பெண் வரை
வித்தியாசம் இருப்பின், அந்த ஆசிரியரின் பணிப்பதிவேடுகளில், அவரின் தவறான
செயல் குறிப்பிடப்படும். அதற்கும் மேல் தவறு செய்தால், ஆசிரியருக்கு
வழங்கப்படும், ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு, ஒவ்வொரு படியாக தண்டனை மற்றும் அபராத அட்டவணையை, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...