இந்தியாவில் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. வடமொழிக் குடும்பம்
மற்றும் திராவிட மொழிக் குடும்பம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக
பிரிந்துள்ள அம்மொழிகளில், பல்வேறான வேலைவாய்ப்புகள் உள்ளன.
எனவே, மொழி தொடர்பான படிப்புகளில் சேர, முன்பைவிட, அதிகளவிலான நபர்கள்
ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமாக, பல்கலைக்கழகங்கள், இந்திய மொழிகளில்
பி.ஏ., மற்றும் எம்.ஏ., படிப்புகளை வழங்கி வந்தன. அதேசமயம், ஜவஹர்லால் நேரு
பல்கலை, டெல்லிப் பல்கலை மற்றும் ஐதராபாத் பல்கலை போன்றவை, சிறந்த
வெளிநாட்டுக் கல்வி ப்ரோகிராம்களையும் வழங்குகின்றன.
ஏராளமான இந்திய மொழிகள் இருந்தாலும், இந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம்
போன்றவை, வேலைவாய்ப்பு என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த மூன்று
மொழிகளின் மீது, கவனம் செலுத்தக்கூடிய மூன்று முக்கிய கல்வி நிறுவனங்கள்
இங்குள்ளன.
இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனம், அடிப்படையில், ஒரு
ஆராய்ச்சி நிறுவனமாகும். இது, இந்திய இலக்கியம் மற்றும் வாய்மொழியான
கலாச்சார கூறுகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. ஒரு
அங்கீகரிக்கப்பட்ட பிஎச்.டி., மையமாக திகழும் இது, நாடெங்கிலுமுள்ள இதன் 11
மையங்களில், 11 இந்திய மொழிகளில், குறுகியகால படிப்புகளை வழங்குவதில்
சிறப்பு பெற்று திகழ்கிறது.
இதர கல்வி நிறுவனங்களான, ராஷ்ட்ரிய சன்ஸ்கிரிட் வித்யாபீடா மற்றும்
கேந்திரிய ஹிந்தி சனஸ்தான் ஆகிய இரண்டும், பல்கலைக்கழக அளவிலான கல்வி
நிறுவனங்கள் மற்றும் அவை பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் என்ற வகைப்பாட்டின்
கீழ் மட்டுமே வருகின்றன. ஏனெனில், அவற்றின் நிர்வாக கட்டுப்பாடு,
யு.ஜி.சி., அமைப்பிடம் இல்லை.
உருது மொழியானது, பொதுத்துறையிடமிருந்து, சமீபத்தில்தான் முக்கிய
கவனிப்பைப் பெற்றது. உருது மொழிக்கான தேசிய கவுன்சில், ஒரு நல்ல டிப்ளமோ
படிப்பை மட்டுமே உருது மொழியில் வழங்கி வந்தது. ஆனால், தற்போது, உருது
மொழியில், பலவிதமான குறுகியகால படிப்புகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய கல்வி நிறுவனங்கள், மொழிக் கல்விக்கான சிறந்த கல்வி
நிறுவனங்களாக திகழ்வதுடன், அத்துறைகளில், இளநிலை முதல் டாக்டரேட்
படிப்புகள் வரை வழங்குகின்றன.
மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழில்துறையாக விளங்கி வருவதால்,
கல்வி நிறுவனங்கள், அத்துறையின் மீது, அதிகளவில் கவனம் செலுத்த
துவங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக, உருது மொழி மேம்பாட்டிற்கான தேசிய
கவுன்சில், ஒரு தனி மொழிபெயர்ப்பு யூனிட்டை தொடங்கியுள்ளது. இதன்மூலம், ஒரு
அறிவியல்பூர்வ இலக்கியத்தை, உருதுமொழிக்கு கொண்டுவரும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் டெல்லிப் பல்கலை போன்றவை,
மொழிப்பெயர்ப்பு துறையில் சிறப்பு படிப்புகளை தொடங்க வேண்டிய தேவையை
புரிந்துகொண்டிருப்பினும், அந்தப் பொதுத்துறை நிறுவனங்கள், அந்தப் பணியை
இன்னும் நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
good news
ReplyDelete