Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனிமேஷன் துறை - அம்சங்கள், பணிவாய்ப்புகள்!


        திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக, உருவங்களை படைக்கும் கலைக்கு அனிமேஷன் என்று பெயர். இக்கலையானது, கலையம்சமான படங்கள், வணிகப் படங்கள், பாப் வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் வலைத்தளங்கள் என்ற வகையில் அனைத்து வகை மீடியாக்களிலும், இந்த அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது.


           அனிமேஷன் என்பது ஒரு குழு பணியாகும். இத்தொழிலில், அனிமேட்டர் தவிர, அனிமேஷன் ப்ராஜெக்ட்டுகளை நிறைவுசெய்ய, நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிபுணர்களில், எழுத்தாளர்கள், Storyboard கலைஞர்கள் மற்றும் கேரக்டர் டிசைனர் ஆகியோர் அடங்குவர். 3D திட்டங்களைப் பொறுத்தவரை, அதில், மாடலர்கள், Riggers மற்றும் லைட்டிங் கலைஞர்கள் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
மென்பொருள் ப்ரோகிராமர்கள், மென்பொருள், தேவைக்கேற்ற பயன்பாடுகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அனிமேஷன் துறையின் பணி வாய்ப்புகள்
ஒரு அனிமேட்டர் என்பவர், மாடல்களை கட்டமைத்தல், Storyboards உருவாக்குதல், ப்ராஜெக்டின் பகுதிகளை இதர குழு உறுப்பினர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தல் போன்ற பலவிதமான பணி நிலைகளில் வேலை செய்கிறார்.
ஒரு அனிமேட்டர் என்பவர் படைப்புத்திறன் உள்ளவராகவும், கலைத்திறன் பெற்றவராகவும், வரைதல் திறன் அமையப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், சிறப்பான தகவல்தொழில்நுட்ப திறன்கள், பொறுமை, நீண்டநேரம் ஆழ்ந்த கவனத்துடன் பணிபுரியும் தன்மை, ஆர்ட் மற்றும் டிசைன் ஆகியவற்றில் ஆர்வம் போன்றவைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

அனிமேஷன் படிப்புகள்
இந்தியாவெங்கும், பல கல்லூரிகளில், அனிமேஷன் தொடர்பான, டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதேசமயம், முதுநிலைப் படிப்பு மற்றும் கார்டூன்(கேலி சித்திரம்) ஆகிய படிப்புகள் அபூர்வமானவை. குவஹாத்தி மற்றும் மும்பையிலுள்ள இன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர்கள், அனிமேஷன் தொடர்பான முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.
பைன் ஆர்ட்ஸ், அப்ளைடு ஆர்ட்ஸ், கமர்ஷியல் ஆர்ட்ஸ், கிராபிக் டிசைன், அனிமேஷன் டிசைன், விசுவல் கம்யூனிகேஷன், டிசைன் ஆகிய பிரிவுகளில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனிமேஷன் ஆர்ட் தொடர்பான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தகுதிகள்
ஒருவர் அனிமேஷன் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அவர் அங்கீகரிக்கப்பட்ட வகையில், குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன், தனது பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அனிமேஷன் தொடர்பான இளநிலைப் படிப்பில் சேர, இதே தகுதிகளே பொருந்தும். அதேசமயம், முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமானால், இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதிகள் கணக்கிடப்பட்டாலும், இத்துறையில் நுழையும் ஒருவருக்கு, படைப்புத்திறன் மற்றும் கலையார்வம் அதிகமிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

மாணவர் சேர்க்கை
தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் திறனை மதிப்பிட, தங்களின் சொந்த திறனாய்வு தேர்வுகளை நடத்துகின்றன.

அனிமேஷனின் வகைகள்
2D Drawn Animation
2D Computer Animation
Stop frame or stop motion animation
3D Computer generated(CG) animation

பணி வாய்ப்புகள்
விளம்பர ஏஜென்சிகள் தொடங்கி, வீடியோ கேம் புரொடியூசர்கள் மற்றும் உயிரோட்டமான திரைப்பட தொழில்கள் வரை, ஏராளமான பணி வாய்ப்புகள் அனிமேட்டர்களுக்கு உள்ளன. திரைப்படங்களைப் பொறுத்தவரை, அனிமேட்டர்களின் பணியானது, அதிக திறமையையும், உழைப்பையும் உள்ளடக்கியது. இதில் அதிகளவு வருமானமும் உண்டு.
இவைத்தவிர, சுய வேலைவாய்ப்பு மற்றும் ப்ரீலேன்ஸ் வாய்ப்புகள் போன்றவையும் மிகுந்துள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive