மதுரை மாவட்டத்தில் 6, 7, 8ம் வகுப்புகளில்
ஆங்கில பாடத்தில் பின்தங்கிய மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் குறைந்தபட்சம்
தேர்ச்சி பெறுவதற்கான எளிய முறையில் ஆங்கிலம்" புத்தகங்கள் இலவசமாக
வழங்கப்படவுள்ளன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நாகராஜ முருகன்
இருந்தபோது, 15 கல்வி வட்டங்களிலும், மூன்று முதல் 8ம் வகுப்பு வரையான
மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் "கல்வி திறமை"
ஆய்வு செய்யப்பட்டது. தமிழ், ஆங்கில எழுத்துக்களை எழுதுவது, வாசிப்பது,
கணிதத்தில் இரண்டு "டிஜிட்" எண்களை கூட்டுதல், பெருக்குதல் போன்ற திறன்கள்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆங்கில எழுத்துகளைக்கூட வாசிக்க தெரியாத
மாணவர் எண்ணிக்கை 13,707ம், "டிக்டேட்" செய்ததை எழுதத் தெரியாதவர் 19,896ம்
உள்ளனர் என தெரிந்தது.
குறிப்பாக, 8ம் வகுப்பில் மட்டும் 5,424 மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களை வாசிக்க தெரியவில்லை. சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது. "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" என்ற புத்தகமும் தயாரிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்திற்கு ஆட்சியர் ஒப்புதல் அளித்தார். இதனால் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...