ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று
தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள்
உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி
பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன்
தலைமையில், பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை, சிஎஸ்ஐ
பேராயர் கிறிஸ்துதாஸ் தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தில், 'முழுமையான ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மொத்த பணிக் காலத்தை கணக்கில் எடுத்து தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கிட வேண்டும்,10 வருடங்களுக்கு மேல் கல்வி பணி ஆற்றிவரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும்" உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள்,வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...