அரசு உயர்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு
மேற்கொண்ட சி.இ.ஓ., அருள்முருகன், அங்கு தமிழாசிரியர் விடுப்பில் சென்றதை
அறிந்து, அவரே பாடம் நடத்தி மாணவர்களின் பாராட்டை பெற்றார்.
.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ப்ளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை
அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை, மாவட்ட கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள்
மற்றும் நுணுக்கங்கள் குறித்து, கையேடுகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி
அளிக்கவேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு
நெருங்கிவரும் நிலையில் ஆசிரியர்கள் விடுப்பில் செல்வதை தவிர்க்கவேண்டும்
எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் பாட ஆசிரியர்கள் சரியாக பின்பற்றுகிறார்களா? என்பதை
அறிந்துகொள்வதற்காக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும்
மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு திடீரென்று சென்று ஆய்வு நடத்தி
வருகின்றனர்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்துகுட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டி
அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
அருள்முருகன், அங்கு தமிழாசிரியர் விடுப்பில் சென்றுள்ளதும், அவருக்கு
பதில் பாடம் நடத்த வேறு ஆசிரியர்கள் இல்லாமல், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள்
தவித்து வருவதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். சாலை விபத்தில் காயமடைந்த
தமிழாசிரியர், சிகிச்சை எடுத்துகொள்வதற்காக மருத்துவ விடுப்பில்
சென்றுள்ளது தெரியவந்தது.
உடனடியாக சி.இ.ஓ., அருள்முருகன் வகுப்புக்கு
சென்று. தமிழ் பாடம் நடத்தியதோடு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
வெற்றிபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, இரண்டு மணி நேரம்வரை
மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தார். மேலும் ஆசிரியர்கள் பாடம்
நடத்துகின்ற விதம் குறித்து, மாணவர்களிடம் கேட்டறிந்த சி.இ.ஓ.,
அருள்முருகன், நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அதிக
மதிப்பெண்களுடன், 100 சதவீத தேர்ச்சிபெற வாழ்த்தும் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி.,
பொதுத்தேர்வு நெருங்கிவரும் நிலையில், விடுப்பில் சென்ற ஆசிரியருக்கு
பதில், மாற்று ஆசிரியர்களை பணியமர்த்தி பாடம் நடத்த பள்ளி தலைமை ஆசிரியரும்
சரி, இதர ஆசிரியர்களும் சரி முன்வராத நிலையில், ஆய்வுக்கு வந்த சி.இ.ஓ.,
அருள்முருகன், மாணவர்களின் நலன் கருதி, கடமை உணர்வுடன் பாடம் நடத்தி
அறிவுரைகள் வழங்கியதை, மாமாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...