"பீகாரில், பள்ளி மாணவியர், 10 லட்சம் பேருக்கு, தற்காப்பு கலை பயிற்சி
அளிக்கப்படும்" என, அம்மாநில, கல்வி திட்ட குழு இயக்குனர் ராகுல் சிங்
கூறினார்.
முதல் கட்டமாக, மாநிலத்தில், 150 நடுநிலை பள்ளிகளில் உள்ள, 1,500
மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம்,
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், விரைவில் விரிவுபடுத்தப்படும்.
இதனால், மாணவியரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும்
சிறந்து விளங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த மாதம், அரசு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்
குமார், "பெண்களின் பாதுகாப்புக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளை தெரிந்து கொள்வது அவசியம்"
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...