இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான,
தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல்
செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித்
துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் கல்வியாண்டில், 381 கோடி ரூபாய் வரையிலான பணப் பயனை 24.76 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள்.
பள்ளிகளுக்கான, கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் போன்ற
பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கும் பணி, அனைவருக்கும்
கல்வித்திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம் மற்றும் நபார்டு வங்கி
நிதியுதவி ஆகியவற்றின் மூலம், தொடர்ந்து நடைபெறும்.
இந்த 2013-14ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 700
கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு 366.57 கோடி
ரூபாயும், நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு 293 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு, கூடுதல் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த 50
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2013-14 கல்வியாண்டின்
இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 100% பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வசதியுடன் கழிப்பறை வசதிகளும் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.
விரிவான ஒதுக்கீட்டு விபரங்கள்
97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க 217.22 கோடி ஒதுக்கீடு.
86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க 110.96 கோடி ஒதுக்கீடு.
14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க 323.70 கோடி ஒதுக்கீடு.
53.53 லட்சம் மாணவர்களுக்கு, நான்கு சீருடை தொகுப்புகள் வழங்க 353.22 கோடி ஒதுக்கீடு.
13 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் புத்தக பைகள் வழங்க 19.79 கோடி ஒதுக்கீடு.
6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க 8.47 கோடி ஒதுக்கீடு
9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபட புத்தகங்கள் போன்றவை வழங்க 6.65 கோடி ஒதுக்கீடு.
6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 200.98 கோடி ஒதுக்கீடு.
மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ஒதுக்கீடு.
32.79 லட்சம் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு
புதிதாக 10 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளையும், 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கல்வியாண்டில்(2013-14), இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்,
பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் துவங்கும். ஏற்கனவே
அறிவித்தபடி, கூடுதலாக, மாநிலத்தில், 8 கலை-அறிவியல் கல்லூரிகள்,
இக்கல்வியாண்டு முதல் செயல்படத் துவங்கும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தை அளிக்கும் திட்டத்திற்கு, இக்கல்வியாண்டில், 673 கோடி ஒதுக்கீடு.
இக்கல்வியாண்டில், 5.65 இலவச மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக, 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்காக, இக்கல்வியாண்டில், 112.50 கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத்திட்டம்
இக்கல்வியாண்டில், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவிற்கு, 1,492.86 கோடி ஒதுக்கீடு.
மேலும், 14,130 மதிய உணவு மையங்களில், 359.70 கோடி செலவில், சமையலறை, இருப்பு அறைக்கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம்,
இக்கல்வியாண்டில், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம்
மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம்
விரிவுபடுத்தப்படும். இதற்காக 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்வியாண்டில், ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...