குடும்ப ஓய்வூதியதாரர்கள் புத்தகத்தில் தங்கள்
பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டிருந்தால், அதை சரி செய்வதற்கான வாய்ப்பை
மத்திய அரசு அளித்துள்ளது.
அதன்படி, குடும்ப ஓய்வூதிய ஆணைப் புத்தகத்தில்
ஓய்வூதியதாரரின் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையின் பிறந்த தேதி தவறாக
இடம்பெற்றிருந்தால் உரிய ஆவணங்கள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம் என்று
மத்திய பணியாளர் நலத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பான் கார்டு, மேநிலைக் கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆகியவற்றில் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அதோடு, பிறந்த தேதியை சரி செய்வதற்கான விளக்கக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட துறைக்கு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிக்குப் பிறகு அவரது பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணைக்கு தொடர்ந்து ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...