நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிளஸ் 2
விடைத்தாள் சிதறிய சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பாதிக்காத வகையில் வீடியோ
காட்சிகள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், மற்றும்
தபால்துறை, ரயில்வே பார்சல் சர்வீஸ் அதிகாரிகளும் மையத்திற்கு நேரடியாக
வந்து ஆய்வு மேற்கொண்டனர். கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்திய சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே
பார்சல், மற்றும் போஸ்டல், கல்வித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
சர்ச்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் விஷயத்தில் கல்வித்துறையினர் என்ன
முடிவெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதுகுறித்த செய்தி கடந்த
14ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியானது.
சேதமடைந்த பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவதற்கான
ஏற்பாடுகள் குறித்து மாநில கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்;
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பார்சல் அவிழ்ந்து பிளஸ் 2
விடைத்தாள்கள் சிதறியதில் பேப்பர்கள் எதுவும் சேதமடையவில்லை. அனைத்து
விடைத்தாள்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு திருத்தும் மையத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக விடைத்தாள்களின் நிலவரம் குறித்த வீடியோ காட்சி
கல்வித்துறை உயரதிகாரிகள் பார்வைக்கு வந்தது. இக்காட்சிகளின் ஆதாரங்கள்
துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் மாணவர்கள் பாதிக்கும் வகையில்
எதுவுமில்லை. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சம்பவத்தை சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் சாதுர்யமாக கையாண்டு சரிசெய்துள்ளனர். இதற்கான அறிக்கைகளும்
அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு
பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாகர்கோவிலுக்கு
விடைத்தாள்கள் கொண்டுவந்ததில் அலட்சியப்போக்கு நிலவி வந்ததும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்வு வினா, மற்றும் விடைத்தாள்களை கையாள்வதில்
மேலும் துல்லியமான நடவடிக்கையை கல்வித்துறை கையாள அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை.
ReplyDeleteதமிழக அரசின் ஆணைப் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு மற்றும் போட்டித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வது வழக்கம். இதில் கணினி ஆசிரியர்களாக பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, வாழ்க்கைக் கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் படித்து வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு கடந்த 5.3.2012 அன்று 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களாக நியமித்து தமிழக அரசு பணி ஆணை வழங்கியது. இதில் கடந்த ஒரு ஆண்டாக கணினித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது அரசு 6ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது ஏற்கனவே ஒரு ஆண்டாக பள்ளிகளில் கணினி பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்பணியிடங்கள் நிரப்புவதில் தேர்வு மற்றும் பதிவு மூப்பைக் கடைபிடிக்காமல் எங்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.