பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி
உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு
செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு
அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, பள்ளி
கல்வித்துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு
வழங்கும் கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், இன்று நடந்தது. பணிமூப்பு
பட்டியலில் உள்ளவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, முதன்மைக் கல்வி
அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி
அலுவலகங்களில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி துறையில், 15 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
முதுநிலை விரிவுரையாளர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்த, 15 பேர்,
முதல்வர்களாக , பதவி உயர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வும், ஆன்-லைன்
வழியில் நடந்தது
கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிநியமனம் எப்பொழுது வழங்கப்படும்.
ReplyDelete