ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில்,
நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன்
வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு
குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
அறிவியல் சார்ந்த பல துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
இந்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் பெற வேண்டும்,&'&' என்றார்.
.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர்
சீனிவாசன் பேசுகையில், "பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல்
உட்பட வெளிநாடுகளில் வசிப்போருக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வும்,
தொலைநோக்கு சிந்தனையும் அதிகம். அதேபோல், நம் மாணவர்களும் அதிகளவு
ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...