பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பில் அளிக்கப்படும், நவரத்தினா
பல்கலை அந்தஸ்து பெற, தமிழகத்தில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்வு
செய்யப்படும் ஒன்பது பல்கலைகளுக்கு, தலா, 300 கோடி ரூபாய், கூடுதல் மானியம்
கிடைக்கும்.
கூடுதலாக பெறப்படும், 300 கோடி ரூபாயை, பாடத்திட்டங்கள், ஆராய்ச்சி
திட்டங்கள், பேராசிரியர் நியமனம், எதிர்கால திட்டங்களுக்காக செலவிடுவது
குறித்த கருத்துரு தயாரிக்க, பல்கலைகளுக்கு, சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
நவரத்தினா பல்கலையின் ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடு பல்கலையில் சென்று
ஓராண்டு படிக்கலாம்; அதேபோல், வெளிநாட்டு பல்கலை மாணவர்களும், இந்திய
பல்கலைகளுக்கு வந்து படிக்கலாம். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, அறிவியல்
தொழில் நுட்பங்கள் தொடர்பாக, வளர்ந்த நாடுகளின் வல்லுனர்கள், நம்
பல்கலைகளுடன் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
நவரத்தினா அந்தஸ்து பெற, சென்னை, மதுரை காமராஜ் பல்கலை உட்பட,
ஆற்றல்சால் அந்தஸ்து பெற்றுள்ள, 17 பல்கலைகளும், திருநெல்வேலி மனோன் மணியம்
சுந்தரனார், பெரியார் பல்கலைகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...