ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 20
சதவிகிதம் பேரிடம் தமிழ் வாசிப்பு திறன் இல்லை என செஞ்சியில் நடைபெற்ற
வாசிப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டத்தில் மாநில
தொடக்கக்கல்வி இணை இயக்குநர்
லதா வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலைக்கு
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பாவர். வாசிப்புத்திறனை
மேம்படுத்தாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.
விழுப்புரம் மாவட்ட தொடக்கக்கல்வித்துறை சார்பில் செஞ்சி வல்லம் ஒன்றியங்களுக்கான வாசிப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு கூட்டம், செஞ்சி வட்டார வளமையத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மல்லிகா தலைமை தாங்கினார். செஞ்சி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கருணாநிதி வரவேற்றார். வல்லம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ராமச்சந்திரன் கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணிராஜ், செஞ்சி மற்றும் வல்லம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஜெயகோபால், காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக்கூட்டத்தில் மாநில தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிதிஉதவிபள்ளிகள்) லதா கலந்து கொண்டு இரு ஒன்றியங்களின் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட அடைவுத்திறன் தேர்வின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாணவர்கள் வாசிப்புத்திறன் கண்டறியப்பட்டது. இது குறித்து அவர் பேசியது: செஞ்சி ஒன்றியத்தில் 5-ம் வகுப்பில் பயிலும் 1870 மாணவர்களில் தமிழில் 342 மாணவர்களும் ஆங்கிலத்தில் 899 மாணவர்களும் கணிதத்தில் 106 மாணவர்களும் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படை செயல்களில் பின்தங்கியுள்ளனர்.
வல்லம் ஒன்றியத்தில் 5-ம் ஆம் வகுப்பு பயிலும் 1267 மாணவர்களில் தமிழில் 303 மாணவர்களும், ஆங்கிலத்தில் 696 மாணவர்களும், கணிதத்தில் 116 மாணவர்களும் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படை செயல்களில் பின்தங்கியுள்ளனர். இந்நிலை வேதனைக்குரியதாகும். இந்நிலைக்கு தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் முழு பொறுப்பாவார்கள்.
தமிழக அரசு மாணவர்களுக்காக நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஒரு மாணவனுக்கு வருடத்திற்கு சுமார் ரூ.10 ஆயிரம் தமிழக அரசால் செலவிடப்படுகிறது. இதில் ஆசிரியர் சம்பளத்திற்காக மட்டும் ஒரு மாணவனுக்கு ரூ.7,750 வழங்கப்படுகிறது.
இருப்பினும் ஆசிரியர்கள் ஏழை குழந்தைகளின் கல்வி நலனில் சிறிதும் அக்கறையின்றி உள்ளனர். இந்நிலை முற்றிலும் மாறவேண்டும்.
இவ்வாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, பின் தங்கிய மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும்.
அதே போல் ஒன்றியத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளான உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைவாக உள்ள பள்ளிகளின் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
ஆய்வு கூட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, உதவிதொடக்கக்கல்வி அலுவலர் நடராசன், இரு ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எட்டாம் வகுப்பு வரை இலவசத்தேர்ச்சி என்றால் வரும் காலங்களில்மாணவர்களின் வாசிப்புத்திறன் இப்படித்தான் இருக்கும். ஆசிரியர்களை குறைகூறூவதேன்?
ReplyDelete