புதிய ஓய்வூதிய திட்டத்தில்
தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு
இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில்
சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்
அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலை படியில் 10 சதவீ தம் பங்களிப்பு
தொகையாக பிடித்தம் செய்யப்படும். அத்துடன் அரசும் தங்களுடைய பங்களிப்பாக
அதே தொகையை கொடுத்துவிடும்.
அரசு ஊழியர்கள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சேம நல நிதி, பங்களிப்பு தொகை ஆகியவை பொது கணக்குத்துறை மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, கணக்கு பராமரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் சேமநலநிதி, பங்களிப்பு தொகை ஆகியவை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் பிடிக்கப் பட்டு, சென்னை யில் உள்ள புள்ளியியல் மையத்தில் கணக்கு பராமரிக்கப்படுகிறது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், கருவூலங்களிலிருந்து பிடித்தம் தொடர்பாக முறையான தகவல்கள் செல்லாததால் புள்ளியியல் மையத்தில் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களு க்கு சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவரம் 2006-07க்கு பிறகு கொடுக்கப்படவில்லை.
அதேபோல் பங்களிப்பு திட்டத்திலும் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவ ரம் இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 36 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர் களது பிடித்தம் தொடர்பான விவரம் இல்லாததால் இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு வருகின்றனர். ஆனால் இது வரை எந்தவித பதிலும் தெடக்கக்கல்வித்துறையால் அளிக்க முடியவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...