ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும்,
உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில்
மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள்.
ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.
இந்த நிலையில், ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கும் மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புதிதாக துவங்கப்பட்ட ஐஐடிக்களில் அல்ல. துவங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐஐடிக்களுக்கும் இதே நிலைதான். இதிலும் என்ஐடிக்களின் நிலை மிகவும் மோசம். இங்கு 57 சதவீதம் அளவுக்கு பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உளளது. பொதுவாக மாணவர்கள் புதிய ஐஐடிக்களை விட, பழைய ஐஐடிக்கள் தான் கல்வியை நல்ல முறையில் தரும் என்று நம்புவார்கள். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஐஐடிக்களில் 4ல், போதிய பேராசிரியர்கள் பணியாற்றி நல்ல முறையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...