Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்


                    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

          ஜூன் 2012 ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்களும், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களும் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மார்ச் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

              அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்று, பட்யச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ ஏப்ரல் 4ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

              மேலும் சிறப்பு தேர்வுக்கட்டணம் ரூ.1000ம் செலுத்தி ஜூன் 2012 முதல் மற்றும் இரண்டாமாண்டுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்த்தில் மார்ச் 30ம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

                மறுகூட்டலுக்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 5ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஜூன் 2012ல் தேர்வெழுதி பெற்ற சான்றிதழின் நகலை கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!