புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கு, புதுச்சேரி அரசு 3 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், பாலிடெக்னிக், மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்துக் கல்லூரிகள் என ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (மார்ச் 20) முதல் மார்ச் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் அறிவித்துள்ளார்.
மேலும், மார்ச் 23, 24 ஆகிய தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், புதன்கிழமை மூடப்படும் பள்ளி கல்லூரிகள் மீண்டும் மார்ச் 25-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.அதேசமயம், விடுமுறைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. காரணம், இலங்கைப் பிரச்னையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தவிர்க்கவும், சில அமைப்புகள் மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்கவுமே இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...