பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக வரிசை எண்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் திருடப்படுவதை தடுக்க இந்த புதிய முறையை
கல்வித்துறை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தாண்டு முதல் ஒவ்வொரு வினாத்தாள்களிலும் மாணவர்களின் தேர்வு
எண்களுக்கு கீழ், சிவப்பு கலரில், 7 இலக்கங்கள் கொண்ட வரிசை எண்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு
கவர்களிலுள்ள (100 வினாத்தாள் கொண்டவை) துவக்க எண், முடிவு எண்கள்
குறிப்பிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது: தேர்வு
மையங்களுக்கு, கவர்களில் மொத்தமாக அனுப்பி வைக்கப்படும், வினாத்தாள்
எண்ணிக்கையில், சில நேரங்களில் குறைவு ஏற்படும். அதனை தடுக்க வரிசை எண்
தரும் முறை உதவும். வினாத்தாள் திருடப்பட்டு, பிரதிகள் எங்கு வெளியானாலும்
இந்த எண்களை வைத்து, முறைகேட்டை கண்டுபிடிக்கலாம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...