கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதான
தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2
தேர்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 21ம் தேதி நடைபெற்ற உயிரியல்
தேர்வுகளுடன் மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான
தேர்வுகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் கணினி அறிவியல் பிரிவு
மாணவர்களுக்கான இறுதித் தேர்வு நேற்று நடைபெற்றது.
கணினி அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் யாவும் எதிர்பார்த்ததைப் போலவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
கடைநிலை மாணவரும் தேர்ச்சி அடைந்துவிடக் கூடிய அளவிலேயே வினாத்தாள் இருந்ததாகவும், சராசரி மாணவர்கள் 150 மதிப்பெண்கள் வரை பெற முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதானத் தேர்வுகள் முடிவடைந்துள்ளன. வரும் 27ம் தேதி அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் தேர்வுகளுடன் அனைத்துத் தேர்வுகளும் நிறைவடைகின்றன. கணினி அறிவியல் தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 2 எழுத்துப் பிழைகள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் பிரிவில், "எவை ஒரு மாறியின்' என்று தொடங்கும் வினாவுக்கான விடையில், "வரை எல்லை செயற்குறி' என்பதற்கு பதிலாக, "வரை எல்லை செயற்கூறு' என்றும், 62வது வினாவாக இடம் பெற்றுள்ள "பைரஸி' தொடர்பான வினாவுக்கு, "உரிமை இல்லா' என்று இருப்பதற்குப் பதிலாக, "உரிடை இல்லா' என்றும் எழுத்துப் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 27ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தமிழகம், புதுவையில் தொடங்குகின்றன. இத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை சுமார் 12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...