பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு கேள்வி ஆங்கிலத்தில் சரியாகவும்,
தமிழில் தவறாகவும் உள்ளதால், 5 மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ,
என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "ரேடான்" என்பது
தனிமத்தை குறிக்கும். "ரேடார்" என்றால் கருவியை குறிக்கிறது. இதில்
ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விதான் சரி. அதன்படி பதில் எழுதினால்
தான் 5 மதிப்பெண் கிடைக்கும்.
ஆனால், தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் பலர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளதை
பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால், 5 மதிப்பெண் குறைந்து
"கட் ஆப்" மதிப்பெண் பாதிக்கும் என, மாணவர்கள் அச்சப்படுகின்றனர், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...