Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு: நாமக்கல், ஈரோட்டில் கூடுதல் கண்காணிப்பு


          பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கான தேர்வு துவங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை கண்காணிக்க, கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

             பத்தாம் வகுப்பு தேர்வோ, பிளஸ் 2 தேர்வோ, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடிப்பதிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட, தொழிற்கல்வி படிப்புகளில், அதிக இடங்களை பிடிப்பதிலும், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவியரின் பங்கு தான் அதிகம்.

              சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இவற்றில், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் தான், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன.

               இத்துடன், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "சீட்&' கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, மாணவ, மாணவியரை சேர்க்கின்றனர். ஆண்டு முழுவதும், மாணவ, மாணவியருக்கு ஓய்வு கொடுக்காமல், கசக்கிப் பிழிந்து, பாடப் பகுதிகளை அப்படியே, மனப்பாடம் செய்ய வைப்பது தான், சாதனை பள்ளிகள் செய்யும் வேலை என, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

              எனினும், தேர்வின்போது, பிரபலமான பள்ளிகளில் முறைகேடுகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க, அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், தேர்வை கண்காணிக்கும் பணியில், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஈடுபட்டு உள்ளார்.

              நேற்று முன்தினம், இயற்பியல் தேர்வு துவங்கியதும், கூடுதலாக, டி.ஆர்.பி., உறுப்பினர்-செயலர் அன்பழகன், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம் ஆகியோர், நாமக்கல் மாவட்டத்திற்கு பறந்தனர்.

              இதேபோல், ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன், தேர்வை கண்காணித்து வருகிறார். தற்போது, ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை ஆகியோர், கூடுதலாக சென்றுள்ளனர்.

                  முக்கிய பாட தேர்வுகள் முடியும் வரை, இவர்கள், கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுவர் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

              மாநிலம் முழுவதும், பெரிய அளவில், 100 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகள், ஒருசில நிர்வாகங்களின் கீழ், குழுமமாக இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகள், அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.

                கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணங்களை விட, பல மடங்கு கூடுதலாக தான் வசூலிக்கின்றன. இது, கல்வித்துறை அதிகாரிகள் உட்பட, அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசின் எந்த கடிவாளத்திலும் சிக்காமல், திமிங்கலம் போல் இயங்கி வரும், 100 பள்ளிகளையும், முழுமையாக கண்காணிக்கவும், அரசின் விதிமுறைகளை, இந்த பள்ளிகளில், 100 சதவீதம் அளவிற்கு அமல்படுத்த வேண்டும் எனில், அரசுத் தரப்பில், கடுமையான நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive