Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு ரத்து கிடையாது: தேர்வுத்துறை - Dinamalar



           "நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், "காப்பி" அடிக்க முயற்சி நடந்ததை, முன்கூட்டியே தடுத்து நிறுத்தி விட்டோம்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறினார்.


           கடந்த, 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 11ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வு நடந்த நாளன்று, நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள், "காப்பி" அடிக்க, பள்ளி நிர்வாகம் முயற்சி செய்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

          கேள்வித் தாள்களுக்குரிய விடைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிகாரிகள் குழு வருவதை அறிந்ததும், விடைத்தாள் துண்டுகளை, ஆங்காங்கே வீசி எறிந்ததும், விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம், பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

             பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை ரத்து செய்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அந்த பள்ளியில் தேர்வெழுதிய, 420 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள்கள், சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

           இதுகுறித்து இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: சம்பந்தப்பட்ட பள்ளியில், தேர்வு முறைகேடு நடக்க இருந்ததை, முன்கூட்டியே கண்டுபிடித்து, தடுத்து நிறுத்தி விட்டோம். எனினும், அதிகாரிகள் குழு வருவதற்கு முன், ஏதாவது முறைகேடுகள் நடந்ததா என்பதை கண்டறிய, அந்த பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களையும், சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம்.

             என் நேரடிப் பார்வையில், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். எனினும், இயற்பியல் தேர்வு, ரத்து செய்யப்படாது. இவ்வாறு வசுந்தரா தேவி கூறினார்.




1 Comments:

  1. enna tha thadutinga. yellam mudinsa pirrrrrraku thanae aswer gorund la irukarada vasithanae start panduninga.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive