பிளஸ் 2 தேர்வுகள், நேற்றுடன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வு, நேற்று (27ம் தேதி)துவங்கியது. மாநிலம் முழுவதும், 3,012
மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தமிழ் முதற்தாள் தேர்வை
எழுதினர்.
இதற்கிடையே, விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் முதல்
துவங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று துவங்கிய நிலையில்,
நேற்றைய தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இல்லை என, தமிழ் ஆசிரியர்கள்
தெரிவித்தனர். தொடர்ந்து, ஏப்., 12ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன.
தமிழ் தேர்வில், பிட் அடித்ததாக, அரியலூர் மாவட்டத்தில், ஏழு மாணவர்கள்;
கடலூர் - நான்கு பேர்; வேலூர் மற்றும் சென்னை - தலா ஒருவர்; தி.மலை - 13
பேர் என, 26 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். 26 பேரில்,
இருவர் மட்டுமே, பள்ளி மாணவர்கள் என்றும், 24 பேர், தனித்தேர்வு மாணவர்கள்
என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...