Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12.3.2013 அன்று TESO அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் - பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு





3 Comments:

  1. குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம்விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்

    நெல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான72 பக்க புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்றுஇரவு வெளிய¤டப்பட்டது.இதில் குறிப்பாக எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப் 4 பணியிடங்கள், விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும்,100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழை மட்டும் நன்றாக படித்து விட்டு தேர்வுக்கு செல்பவர்களின் நிலைமை சிக்கலாகி உள்ளது.இதேபோல விஏஒ தேர்வுக்கும் ஏற்கெனவே குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது விஏஒதேர்வுக்கு 150 வினாக்கள் (225 மதிப்பெண்கள்) பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகியவற்றிற்கும், 50 வ¤னாக்கள் (75 மதிப்பெண்கள்) கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள் ளது. பொதுத்தமிழ் பகுதிக்கு இதுவரை 100 வினாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் எழுத வேண்டு¢ம்.நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது. குருப் 2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
    இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான தேர்வுகள், விஏஒ தேர்வு, தொழில்நுட்ப தேர்வுகள் 1, 2 ஆகிய 10 தேர்வுகளுக்கு72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிட்டது.ஐஏஎஸ் போன்றசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
  2. மாநிலம் முழுவதும் 1000 தொடக்கபள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

    வேலூர்: தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அனை வருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு உத்தரவிட்டது.

    ReplyDelete
  3. 3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    திருநெல்வேலி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை சிறப்புரை ஆற்றினர்.6வது ஊதிய குழு முரண்பாடுகளை களையும் 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையானஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவரும் 15ம் தேதி மாலையில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தானந்தம் தேவதாஸ், முருகையா, மாவட்ட துணைத் தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துசாமி,ஜெயசங்கர், மணிமேகலை, பால்ராஜ், பால் ராபர்ட், சுசிகர் சவுந்திரராஜன், ராஜ்குமார், கென்னடி, சுரேஷ் முத்துக்குமார், பவுல், காமராஜ், துரைராஜ், ஜெயக்குமார், அருள் மரியஜான்,அல்போன்ஸ், பிரம்மநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive