"வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில்,
11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று
கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, கட்டண நிர்ணயக்
குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
முதலில், கட்டண நிர்ணயிப்பில் இருந்து விடுபட்ட, 910 பள்ளிகளுக்கு,
கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணை துவங்கி உள்ளது. தினமும், 100
பள்ளிகளிடம் விசாரணை நடக்கும். இந்த விசாரணை, மூன்று வாரங்களுக்கு
நடக்கும். அதன் பின், 11 ஆயிரம் பள்ளிகள் மீதான விசாரணை நடக்கும்.
அனைத்துப் பள்ளிகளுக்கும், ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், புதிய கட்டணங்களை
நிர்ணயித்து விடுவோம். பள்ளிகளுக்கு, 7 முதல், 10 சதவீதம் வரை, கட்டணங்களை
உயர்த்தலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது. இதற்கு, ஒரு
மதிப்பீட்டை தயாரித்து,
அதனடிப்படையில், கட்டணங்களை உயர்த்தலாம் எனவும், ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கட்டணங்களை உயர்த்தலாம் எனவும், ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, பள்ளிகளின் ஒட்டு மொத்த தரத்தின் அடிப்படையில், கிரேடு
வகைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு
சிங்காரவேலு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...