சிறுபான்மை மொழிகளை, தாய்மொழியாகக் கொண்ட பட்டதாரிகளுக்கான, தமிழ்
மொழித்தாள் தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. இதில், 10
ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரு வாரம் வரை, இந்த தேர்வுகள் நடக்கும்
என்றும், தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில்,
கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை, தாய்
மொழியாகக்கொண்ட மக்கள், அதிகளவில் வசிக்கின்றனர். சிறுபான்மை மொழிகளை, தாய்
மொழியாகக் கொண்ட பட்டதாரிகள், தமிழக அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும்
எனில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் மொழித்தாள் தேர்வை எழுதி,
தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு, நேற்று, பல்வேறு மாவட்டங்களில் துவங்கியது. கிருஷ்ணகிரி,
தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதில், 10
ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும், ஒரு வாரம் வரை, இந்த தேர்வுகள் நடக்கும்
என்றும், தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...