பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வினாத்தாள்கள்,
அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு
அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில் இரு தலைமை
ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
இது பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் "பார் கோடு" முறையில்
அச்சிடப்பட்டுள்ளது. இதை கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்தாலே, அதற்குறிய
கேமராவால் பார்க்கும் போது, ரகசிய குறியீட்டு எண் தெரியவரும்.
"பார் கோடில்" வினாத்தாள் மையங்களின் கோடு எண்ணும்
வழங்கப்பட்டிருக்கும். வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியானால், "பார்
கோடு&' மூலம், எந்த மையத்தில் இருந்து வெளியானது என்பதை தெரிந்து,
நடவடிக்கை எடுப்பதற்காக, முதன் முறையாக இந்த புதியமுறை
பயன்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...