பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால்டிக்கெட், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு,
வரும், 27ம் தேதி துவங்கி, ஏப்., 12ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான
ஹால்டிக்கெட் இன்றும், நாளையும் அலுவலக நேரங்களில் வினியோகிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனித் தேர்வர்கள், செங்கல்பட்டு அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் சி.எம்.எஸ்., ஆண்கள் மேல்நிலை
பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மீஞ்சூர் டி.வி.எஸ்.,
ரெட்டி மேல் நிலைப் பள்ளி, திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடியா மேல் நிலைப்
பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தென் சென்னையை சேர்ந்தவர்கள் எழும்பூர் அம்பேத்கர்
அரசு மேல்நிலைப் பள்ளி, மத்திய சென்னையை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு
மாதிரி மேல்நிலைப் பள்ளி, கிழக்கு சென்னை சூளைமேடு ஜெயபால் கரோடியா பெண்கள்
மேல்நிலைப் பள்ளி, வடசென்னை சேர்ந்தவர்கள், டவுட்டன் எஸ்.எம்.டி.பி.,
வேணுகோபால் செட்டி மேல் நிலைப் பள்ளிகளில் வாங்கிக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...