தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி
கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில்
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
அனைவருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற
அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து
அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும்,
ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி,
அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000
ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு
செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு
உத்தரவிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...