பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண், மூன்று
மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், அதிகம் பேர் நூற்றுக்கு நூறு
பெறுவது சிரமம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளை விட, இந்தாண்டு கேள்விகள்
எளிதாக இருந்தன.
தேர்வு குறித்து திண்டுக்கல் மாணவர்கள், ஆசிரியர் கருத்து.
எஸ்.சிவானி (எஸ்.எம். பி. எம்., மேல்நிலைப்பள்ளி மாணவி, திண்டுக்கல்): கேள்விகள் எளிதாக இருந்தது. எதிர்பார்த்து சென்ற ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் கேள்விகள் வந்திருந்ததால் விடையளிப்பது சுலபமாக இருந்தது. இதனால் நேரம் போதவில்லை என்ற பிரச்னை எழுவில்லை. ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்தன. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்புக்களை படித்திருந்ததால், பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. நிலைமின்னியல், மின்னோட்டவியல், அணு இயற்பியல், அணு கரு இயற்பியல் ஆகியவற்றில் இருந்து அனைத்து மதிப்பெண்களிலும் கேள்விகள் வந்திருந்தது. பள்ளியில் ஏற்கனவே, தொடர் தேர்வு எழுதி பழகியதால் பதில் அளிக்க முடிந்தது.
எஸ்.பூபதி
(அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மாணவர், திண்டுக்கல்): ஒரு மதிப்பெண்
கேள்விகள், மூன்று மதிப்பெண் கேள்விகளில் சில, சற்று சிரமமாக இருந்தன.
இதற்கு பதில் அளித்திருந்தாலும், சரியான விடையா என்ற குழப்பம் உள்ளது.
இதில் முழு மதிப்பெண் பெறுவது என்பது அனைவருக்கும் சிரமம் தான். ஐந்து
மதிப்பெண் கேள்விகள், 10 மதிப்பெண் பழைய கேள்விகள் வடிவில்
கேட்கப்பட்டிருந்ததால் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண்
கேள்விகள் சிரமமாக இருந்ததால், இயற்பியலில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது
சிரமம். அதே சமயம் அதிக மதிப்பெண் பெற முடியும்.
எஸ்.பாண்டியராஜன்
(ஆசிரியர், எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்) கடந்த மூன்று
ஆண்டுகளில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் எளிதான கேள்வித்தாள்
இதுதான். ஒரு மதிப்பெண் கேள்விகள் மாணவர்களுக்கு சிரமமானதாக
தோன்றியிருக்கும். நான்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள விதம் மாணவர்களுக்கு
புதிதாக இருந்திருக்கும். இதற்கு சற்று யோசித்திருந்தால், அவைகளுக்கும்
எளிதில் மாணவர்கள் விடையளித்திருக்க முடியும். மூன்று மதிப்பெண், ஐந்து
மதிப்பெண் கேள்விகள் திரும்ப, திரும்ப கேட்கும் கேள்விகளாக வந்துள்ளது.
இதற்கு மாணவர் எளிதில் பதில்அளித்திருப்பர். படிப்பில் சுமாரான மாணவர் கூட,
எதிர்பார்த்து சென்றதைவிட பத்து மதிப்பெண்கள் கூடுதலாக பெறமுடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...