10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற
தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம்
கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை
எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள்
துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளின் 6வது பக்கத்தில் 5 மதிப்பெண்களுக்கு படிவம் நிரப்பும் பகுதி கொடுக்கப்படும்.
இந்த பகுதியில், விண்ணப்ப படிவம் ஒன்று கேள்வித்தாளுடன் இணைத்து கொடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான தேர்வு மையங்களில் இந்த படிவம் கொடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், மாணவர்கள் விடைத்தாள்களிலேயே படிவத்திற்கான பதிலை நிரப்ப வேண்டும் என அனைத்து தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை வெளியிட்டார்.
அவ்வாறு முழுமையான பதிலை நிரப்பாவிட்டாலும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால்கூட 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பமோ, கவலையோ அடையத் தேவையில்லை என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...