"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான
வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி
கூறியுள்ளது.
குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி
அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா,
குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான
வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.
எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி,
குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...