9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமுக அறிவியல் ஆகிய பாடங்களில் 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (4ம் தேதி) பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வுகள் ஆரம்பமாகிறது. இதனையொட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை நடத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை(4ம் தேதி) பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை வரும் 18ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பிராக்டிக்கல் தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும்
சூழ்நிலையில் ஏற்கனவே ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள்
நடத்தப்பட்டு வந்தது. இப்பயிற்சிகளை நேற்றுடன் முடிக்க அனைத்து மாவட்ட
கல்வித் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் புதியதாக
பொறுப்பேற்ற சுமார் 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
நேற்று 2வது நாளாக இப்பயிற்சி நடந்தது.
ஒவ்வொரு பாட வாரியாக இப்பயிற்சி
மொத்தம் நான்கு நாட்கள் வீதம் இந்த மாத இறுதி வரை நடத்த
திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்பயிற்சிகளை நேற்றுடன் நிறுத்த கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.இதே போல், வரும் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாட
திட்டங்களில் மாற்றம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்2 நாட்கள்
நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே இக்கூட்டம்
நடந்தது.இப்பயிற்சிகள் அனைத்தையும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது
தேர்வுகளுக்கு பின்னர் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் பள்ளிகளில் பிளஸ் 2வை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி பிராக்டிக்கல்
தேர்வுகளையும், பின்னர் பொது தேர்வுகளையும் நல்ல முறையில் நடத்த வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் 100 சதவீத
தேர்ச்சிக்கு மாணவ, மாணவிகளை உரிய முறையில் ஆசிரிய, ஆசிரியைகள்
தயார்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.பள்ளிகளில் பொது தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில்
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடையே இணக்கமான சூழ்நிலைகளை
மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத் தேர்வுகள் இன்னமும் நாற்பது நாட்களில் நடைபெற உள்ள சமயத்தில் இந்த பயிற்சி தேவை இல்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும். அதனால் பயிற்சியை நிறுத்திய இந்த முடிவு சரியே
ReplyDelete