மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் வகுப்புகள் வாரியாக பெயர், முகவரி,
பெற்றோரின் தொழில், வருமானம் போன்ற விவரங்களை கல்வித்துறை பிரத்யேக இணையதள
முகவரியில் பதிய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதியின்றி தனியார்
கம்ப்யூட்டர் மையங்களை அணுக வேண்டி உள்ளதால் மாணவர்களிடம் தலா ரூ. 10
வசூலிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பணிக்கான
காலக்கெடு, ஜன.,31 ல் முடிந்த நிலையில், மேலும், பிப்., 15 வரை
நீடிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விவரங்களை பதிய, ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், காலதாமதம் ஏற்பட்டு ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "தனியார் கம்ப்யூட்டர் மையங்களை
நாடும்போது, பணம் செலவாகிறது என்பதால் ஆசிரியர்களின் ஆர்வம்
குறைந்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்திற்கென குறித்த தேதி அல்லது தனித்தனி
முகவரியை ஒதுக்கியிருக்க வேண்டும்.
பொதுத்தேர்வு நேரத்தில் விவரம் சேகரிப்பு பணியை, தலைமை ஆசிரியர்கள்
கூடுதல் சுமையாக கருதுகின்றனர். பிப்., 15க்குள் முடியுமா என்பதும்
கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...