தமிழக அரசின் பல்வேறு துறைகள், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை,
டி.என்.பி.எஸ்.சி.,க்கு சரிவர தராததன் காரணமாக, பெரும் குளறுபடிகள்
ஏற்பட்டுள்ளன. இதனால், குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்று, பல்வேறு
துறைகளில், பணியில் சேர்ந்தவர்களை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து,
கலந்தாய்வு நடத்தி, புதிய உத்தரவை வழங்கியது.
வேலையில் சேரச் சென்ற இடத்தில், காலியிடம் இல்லை என்ற அதிர்ச்சியும்,
பலருக்கு ஏற்பட்டது. சில துறைகளில், காலி இடங்கள் இல்லாத நிலையிலும்,
ஒதுக்கீடு பெற்று வந்தவர்களை, வேலையில் சேர்த்துக்கொண்டது.
காலியிடங்கள் இல்லாமல், வேலை கேட்டும், பலர், தேர்வாணையத்தை அணுகினர்.
இந்த குளறுபடிகளில் சிக்கிய, 500க்கும் மேற்பட்டோரை, தேர்வாணையம், நேற்று
மீண்டும் அழைத்து, புதிதாக கலந்தாய்வு நடத்தியது. தேர்வாணையத்தின் இந்த
நடவடிக்கை, பணியாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பல பேர், கடந்த மாதம் சம்பளம் பெற்றுள்ளனர். இந்த மாதத்திற்கும்,
விரைவில் சம்பளம் பெற உள்ள நிலையில், வேறு துறைகளுக்கு மாற்றம்
செய்யப்பட்டு, புதிதாக உத்தரவு வழங்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலையை சேர்ந்த, தட்டச்சர் மகேஸ்வரி கூறுகையில், "கடந்த மாதம்
துவக்கத்தில் பணியில் சேர்ந்து, ஒரு மாதம் சம்பளம் வாங்கிவிட்டேன்.
திடீரென, மீண்டும் கலந்தாய்வு என, கடிதம் அனுப்பினர். வேறு துறை, வேறு
பணியிடம் என, கிடைத்தால், பல பிரச்னைகள் ஏற்படும்" என்றார்.
இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது: அரசுத் துறைகளில்
இருந்து, சரியான காலியிடங்கள் எண்ணிக்கை வரவில்லை. இதுதான், ஒட்டுமொத்த
குழப்பங்களுக்கும் காரணம். எங்களுக்கு, காலியிடங்களை காட்டிவிட்டு, அந்த
இடங்களில், கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர்.
இது தெரியாமல், வேலையில் சேரச் சென்றவர்களிடம், "காலியிடம் இல்லை" என,
தெரிவித்து, திருப்பி அனுப்புகின்றனர். சில துறைகளில், காலி இடங்களை
ஏற்கனவே நிரப்பிய போதும், கூடுதலாக, புதிய பணியாளர்களையும் சேர்த்துள்ளனர்.
இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்து, புதிதாக உத்தரவு வழங்கவே, கலந்தாய்வு
நடத்தப்பட்டது. இதனால், பெரிய அளவிற்கு, யாருக்கும் பிரச்னை இல்லை. மேலும்,
இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு வழங்கும் கலந்தாய்வை, விரைவில் நடத்த
உள்ளோம். அதற்கு முன்னதாக, முதலில் உத்தரவு வாங்கியவர்களின் பிரச்னையை
சரிசெய்யவே, கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத் திட்டங்களை மாற்றியமைக்கஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு-Dinamani
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.
எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கம்
ReplyDeleteசென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்றுஅமைச்சர்களை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதில் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தஎன்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகைச்செல்வன், கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்
புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத்தொழில்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறைஅமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா ஒப்படைக்கப்பட்டுள்ளது
புதிய அமைச்சர்கள் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.