மேற்குவங்கத்தில், கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்னையில்,
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர்களுக்கு இடையே, நேற்று பயங்கர
மோதல் வெடித்தது.
கோல்கட்டாவின் ஹரி மோகன் கோஷ் கல்லூரியில், மாணவர் பேரவை
தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் படிவங்கள் நேற்று
வழங்கப்பட்டன. போட்டியிட விரும்பிய திரிணமுல் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை
கட்சியான காங்கிரஸ் கட்சிகளின் மாணவ உறுப்பினர்கள், நேற்று பயங்கரமாக
மோதினர்.
கல்லூரி வளாகத்தை, போர்க்களமாக மாற்றிய அவர்கள்,
பரஸ்பரம், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும், பயங்கர
தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும், கற்களையும், கையில் கிடைத்த
பொருட்களையும் வீசி தாக்கி கொண்டனர்.சண்டையிடும் மாணவர்களை தடுக்கச் சென்ற,
கோல்கட்டா போலீசார், தாக்குதலுக்கு ஆளாகினர்.
மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தபஸ் சவுத்ரி
என்ற எஸ்.ஐ., குண்டு காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ச்சி
அடைந்த போலீசார், இருதரப்பு மாணவர்களையும் சரமாரியாக தாக்கி, ஒருவழியாக,
அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...