மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மறுநாள் நடக்க இருந்த செய்முறைத் தேர்விற்காக, பிளஸ் 2 மாணவர்கள் சிலர்,
ஆய்வக உபகரணங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதிலிருந்த ஆசிட் துளி,
பிரபாகரனின் கண்களில் பட்டது. கண் எரிச்சல் ஏற்பட்டு, விழுப்புரம் தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்தனர். நேற்று காலை, 10:30 மணிக்கு, மாணவனின் உறவினர்கள், பள்ளி
நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவரின்
மருத்துவச் செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக கூறியதை அடுத்து, காலை,
11:30 மணிக்கு கலைந்துச் சென்றனர்.
இதே பள்ளியில், 9ம் வகுப்பு படித்த, மாணவர் சாமுவேல், 14, கடந்த, 19ம்
தேதி, பள்ளி விடுதியிலிருந்து காணாமல் போனார். இவரது பெற்றோர், பல
இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று காலை, 11:30 மணி முதல், 12:15
மணி வரை, சாமுவேலின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையில்
ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...